Courses
Information about Tamil classes
நோக்கம்: மாணவர்களைத் தமிழில் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய அடிப்படை மொழித்திறன்களோடு இருவழிக் கருத்துப்பரிமாற்றத்
திறன்களிலும் மேம்படுத்துவதே ஆல்பரெட்டா தமிழ் பள்ளியின் முதல் நோக்கம்.
மேலும் மாணவர்களைத் தமிழ்ப்பண்பாடு, மரபு, பழக்க வழக்கங்கள், இலக்கியம், வரலோறு ஆகியவற்றைப் பாராட்டி, ஈடுபாட்டுடன் போற்றி வளர்க்க ஊக்கப்படுத்துவதும் அதன் தலையாய நோக்கமாகும்.
Objective: Students are taught to listen, speak, read and write in Tamil. Objective is to teach two way communication with Tamil basic language skills.
We also aims at encouraging the students to appreciate and nurture Tamil culture, traditions, customs, literature and history.
மழலை 1 - PreK 1
குறிக்கோள்:
பேசுதல்:
எளிய தமிழ் சொற்களை, கதைகள், மழலைப் பாடல்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் புரிந்து கொள்ளுதல். மிக எளிய மற்றும் அடிப்படை வாக்கியங்களைப் பேசுதல். குடும்பம், நிறங்கள், விலங்குகள், கொண்டாட்டங்கள் பற்றிய தமிழ்ச் சொற்களை, சரியான உச்சரிப்புடன் தெரிந்து கொள்ளுதல், பொருள்களை அடையாளம் கண்டு சரியான வார்த்தைகளைக் கூறுதல்.
மழலை 2- Prek 2
பேசுதல்:
மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பறவைகள், விலங்குகள், உடல் உறுப்புகள், பழங்கள், காய்கறிகள், பூக்கள் போன்ற அடிப்படை வார்த்தைகளை அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளுதல். மேலும் பல தமிழ்ச் சொற்களை , செயல்பாடுகள், பாடல்கள், மற்றும் கதைகளின் மூலம் அறிதல். சரியான உச்சரிப்பு மற்றும் பொருள்களை அடையாளம் கண்டு சரியான வார்த்தைகளைக் கூறுதல்.
அடிப்படை நிலை - KinderGarten
பேசுதல்:
மாணவர்கள், தமிழில் பேசுவதைப் புரிந்து கொள்ளுதல். கேள்விகளுக்கு ஓரிரு வாக்கியங்களில் பதில் கூறுதல். கதை கூறுதல். படம் பார்த்துப் பேசுதல். சொல்வளம். தமிழ்ப் பாடல்கள் பாடுதல். கொடுக்கப்பட்ட தலைப்பைப் பற்றி பேசுதல். படம் பார்த்து பேசுதல் மற்றும் கதை கூறுதல், கலந்துரையாடல் மூலம் பேச்சுத் தமிழில் பேசுதல்,
விளையாட்டுக்கள் மூலம் புதுப் புது வார்த்தைகளைக் கற்றல், மின் அட்டைகள் மூலம் பொருட்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றை அறிதல், எளிமையான பாடல்களைப் பாடுதல், திட்டப்பணிகள் மூலம் சிறு சிறு வாக்கியங்களை பேச்சுத் தமிழில்
பேசுதல்.
எழுதுதல்:
உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகளை (அகர வரிசை மற்றும் ஆகார வரிசை) முழுமையாக எழுதுதல். குறில். நெடில் எழுத்துகளை எழுதுதல், அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்துகளைக் கொண்டு அமையும் தமிழ்ச் சொற்களை சரியாக எழுதுதல்
படித்தல்:
உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகளை (அகர வரிசை மற்றும் ஆகார வரிசை) அடையாளம் கண்டூ சரியான உச்சரிப்புடன் வாசித்தல், சொற்களை வாசித்தல், குறில் நெடில் இனம் கண்டூ வாசித்தல்
இலக்கணம்:
குறில் நெடில் , வல்லினம், இடையினம், மெல்லினம்.
மேம்பட்ட நிலை - Advanced KinderGarten
பேசுதல்:
மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பறவைகள், விலங்குகள், உடல் உறுப்புகள், பழங்கள், காய்கறிகள், பூக்கள் போன்ற அடிப்படை வார்த்தைகளை அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளுதல். மேலும் பல தமிழ்ச் சொற்களை , செயல்பாடுகள், பாடல்கள், மற்றும் கதைகளின் மூலம் அறிதல். சரியான உச்சரிப்பு மற்றும் பொருள்களை அடையாளம் கண்டு சரியான வார்த்தைகளைக் கூறுதல்.
நிலை 1 - Grade 1
பேசுதல்:
கேள்விகள் மூலம் பேச்சுத் தமிழில் பேசுதல், படம் பார்த்து பேசுதல், கதை மூலம் கருத்தறிந்து பேசுதல், கதையை நாடகமாக நடித்து பேச்சுத் தமிழில் பேசிப் பழகுதல், பாடல்களை பாடுதல், பாடங்களின் மூலம் வெவ்வேறு தலைப்புகள் பற்றி பேசுதல், விளையாட்டுகள் மூலம் புது புது சொற்கள் அறிதல், மின் அட்டை கொண்டு தமிழில்
பொருள்களின் பெயர் அறிந்துப் பேசுதல், திட்டப்பணிகள் செய்வதன் மூலம் பேச்சுத் தமிழில் பேசுதல்.
எழுதுதல்:
உயிர்மெய் எழுத்துகளின் உருவாக்கம், சொல் எழுதுதல், கொடுக்கப்பட்டூள்ள வாக்கியங்களுக்கு ஏற்ற சொல்லை எழுதுதல், ஒரு சொல்லின் உயிர், மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகளை பிரித்து எழுதுதல், எழுத்துகளை முறைப்படுத்தி சொல் அமைத்தல். கையெழுத்துப் பயிற்சி எழுதுதல்.
படித்தல்:
இகர, ஈகார, உகர மற்றும் ஊகார வரிசை எழுத்துகள் / சொற்களை அறிந்து தெளிவான உச்சரிப்புடன் பொருள் அறிந்து வாசித்தல், சிறிய தொடர்களை (இரண்டூ அல்லது மூன்று சொற்கள்) படித்தல்.
இலக்கணம்:
குறில் – நெடில், மூவிடப் பெயர் (தன்மை, முன்னிலை, படர்க்கை, ஏறக்குறைய ஒரே ஒலியுடைய வெவ்வேறு சொற்கள், வல்லினம், மெல்லினம், இடையினம்.
நிலை 2 - Grade 2
பேசுதல்:
படம் பார்த்து பேசுதல், பொருள் பார்த்து பேசுதல், கதை கூறுதல், மின் அட்டை கொண்டு தமிழில் பொருள்களின் பெயர் அறிதல்.திட்டப்பணிகள் செய்வதன் மூலம் தமிழில் பேசுதல்.கதை சொல்லுதல். கேள்விக்கு விடை அளித்தல். பாடல்களைப் பாடுதல்.
எழுதுதல்:
அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்துகளையும் அவற்றைக் கொண்டு அமையும் சொற்களையும் சரியாக எழுதப் பயிற்சி பெறுவதோடு 2 முதல் 3 சொற்களை கொண்ட எளிய வாக்கியங்களை எழுதுதல்.
படித்தல்:
தமிழ் எழுத்துகளை அடையாளம் கண்டு சரியான உச்சரிப்புடன் வாசித்தல். வார்த்தைகளின் பொருள் அறிந்து வாசித்தல். சிறிய தொடர்களை (இரண்டு அல்லது மூன்று சொற்கள்) படித்தல்.
இலக்கணம்:
குறில் நெடில், வல்லினம், இடையினம், மெல்லினம், மூவிடப் பெயர்கள்(தன்மை, முன்னிலை, படர்க்கை)
நிலை 3 - Grade 3
பேசுதல்:
படம் பார்த்து வெவ்வேறு கழலை அறிந்துக்கொண்டு, குறிப்புச் சொற்களின் உதவியுடன் பேச்சுத் தமிழில் பேசுதல், பொருள் பார்த்து பேசுதல், கதை கூறுதல், நாடகம் மூலம் பேச்சுத் தமிழில் பேசுதல், தேவைக்கேற்பக் குரலில் ஏற்ற இறக்கத்துடன் பேசுதல், வாக்கியங்களை வாசித்து கலந்துரையாடுதல், விளையாட்டுகள் மூலம் எளிமையாகப் புரிந்துக் கொண்டு பேசுதல், திட்டப்பணிகள் செய்வதன் மூலம் வித விதமான தலைப்புகளை ஆராய்ந்துப் பேசுதல்.
எழுதுதல்:
அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்துகளையும், அவற்றைக் கொண்டு அமையும் சொற்களையும் சரியாக எழுதுதல். 2 முதல் 3 சொற்களை கொண்ட எளிய வாக்கியங்களை எழுதுதல், படித்த எழுத்துகளையும். சொற்களையும் கொண்டு எளிய வாக்கியங்களை தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும் உருவாக்குதல், கையெழுத்துப் பயிற்சி எழுதுதல்., ஆசிரியர் சொல்வதைப் புரிந்து, கேட்டுச் சரியான சொல்லை எழுதுதல். எழுத்துகளை வரிசைப்படுத்தி சொல் உருவாக்குதல். சொற்களை வரிசைப்படுத்தி வாக்கியம் அமைத்தல்
படித்தல்:
சொற்கள் மற்றும் வாக்கியங்களின் பொருள் அறிந்து சரியான உச்சரிப்புடன் வாசித்தல், வாக்கியங்களை வாசித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், சிறிய பாடல்கள் மற்றும் கதைகளை வாசித்தல், கிரந்த எழுத்துகளை அறிதல், ஆத்திசூடியை பொருள் அறிந்து வாசித்தல், பத்தியை வாசித்துக் கருத்தறிதல்.
இலக்கணம்:
ஒருமை-பன்மை, ஆண்பால் – பெண்பால். காலங்கள். குறில் – நெடில் வாக்கியங்கள், உயர்தினை, அஃறினை, மூவிடப் பெயரும் வினைமுற்றும், பெயர்ச்சொல் வினைச்சொல்லை விவரிக்கும் சொற்கள், வினா எழுத்துகள்சொற்கள், பெயர்சொல்லுக்கு ஏற்றவாறு வினை முற்று பெறுதல், ஒரு & ஓர் பயன்பாடு, ஒலி வேறுபாடு.
நிலை 4 - Grade 4
பேசுதல்:
பாகமேற்று நடித்தல், தேவைக்கேற்பக் குரல் ஏற்ற இறக்கத்துடன் பேசுதல், சூழலுக்கேற்ப பேச்சுத் தமிழில் பேசுதல் அல்லது எழுத்துத்தமிழில் பேசுதல், படம் பார்த்து வெவ்வேறு கழலை அறிந்துக்கொண்டு. குறிப்புச் சொற்களின் உதவியுடன் பேச்சுத் தமிழில் பேசுதல், விளையாட்டுகள் மூலம் எளிமையாகப் புரிந்துக் கொண்டு பேசுதல், திட்டப்பணிகள் செய்வதன் மூலம் வித விதமான தலைப்புகளை ஆராய்ந்துப் பேசுதல்.
எழுதுதல்:
படித்த எழுத்துகளையும், சொற்களையும் கொண்டூ 4 முதல் 5 சொற்கள் கொண்ட எளிய வாக்கியங்களை உருவாக்குதல். தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும் எழுதுதல். ஆசிரியர் சொல்வதைப் புரிந்து, கேட்டுச் சரியான சொல்லை எழுதுதல். சொற்களை வரிசைப்படுத்தி வாக்கியம் அமைத்தல்.
படித்தல்:
சொற்களை சரியான உச்சரிப்புடன் பொருள் அறிந்து வாசித்தல். சிறு வாக்கியங்களைப் பொருள் அறிந்து ஏற்ற இறக்கத்துடன் வாசித்தல். குறைந்த வாக்கியங்கள் கொண்ட பாடல்கள், கதைகள் வாசித்தல். திருக்குறள் பொருள் அறிந்து வாசித்தல், பத்தியை வாசித்துக் கருத்தறிதல்
இலக்கணம்:
ர, றன,ண,ல, ௭, ழ வேறுபாடுகள், தன்மை, முன்னிலை, படர்க்கை, ஒருமை, பன்மை, காலங்கள், குறில் நெடில், எதிர்ச்சொற்கள், வாக்கியங்களைபத்திகளை நிறைவு செய், சொற்களை வரிசைப்படுத்தி வாக்கியம் அமைத்தல், கேட்டு/படித்து கருத்தறிதல், சொல்வளம், ஆண்பால் பெண்பால், வேற்றுமை உருபுகள்.
நிலை 5- Grade 5
பேசுதல்:
படம் பார்த்து வெவ்வேறு சூழலை அறிந்துக்கொண்டு, குறிப்புச் சொற்களின் உதவியுடன் பேச்சுத் தமிழில் பேசுதல், விளையாட்டுகள் மூலம் எளிமையாகப் புரிந்துக் கொண்டூ பேசுதல், திட்டப்பணிகள் செய்வதன் மூலம் வித விதமான தலைப்புகளை ஆராய்ந்துப்
பேசுதல்.பாகமேற்று நடித்தல், பல்வேறு சூழல்களில் கருத்துகளை எளிய முறையிலும் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலும் கூறுதல், தேவைக்கேற்பக் குரல் ஏற்ற இறக்கத்துடன் பேசுதல், சூழலுக்கேற்ப பேச்சுத் தமிழில் பேசுதல் அல்லது எழுத்துத்தமிழில் பேசுதல்.
எழுதுதல்:
சூழல், தொடர்படங்கள், உதவிச் சொற்கள், சிறு குறிப்புகள் முதலியவற்றைப் பயன்படுத்தித் தம் கருத்துகளை வாக்கியங்களாக எழுததல். படித்த எழுத்துகளையும், சொற்களையும் கொண்டு எளிய வாக்கியங்களை உருவாக்குதல். தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும் எழுதுதல், ஆசிரியர் சொல்வதைப் புரிந்து, கேட்டுச் சரியான சொல்லை எழுதுதல். சொற்களை வரிசைப்படுத்தி வாக்கியம் அமைத்தல்.
படித்தல்:
சொற்களை சரியான உச்சரிப்புடன் பொருள் அறிந்து வாசித்தல். சிறு வாக்கியங்களைப் பொருள் அறிந்து ஏற்ற இறக்கத்துடன் வாசித்தல். குறைந்த வாக்கியங்கள் கொண்ட பாடல்கள், கதைகள் வாசித்தல். திருக்குறள் பொருள் அறிந்து வாசித்தல். பத்தியை வாசித்துக் கருத்தறிதல்.
இலக்கணம்:
வேற்றுமை உருபுகள், பெயரெச்சம் (அ) பெயரடை (௮) பெயர் உரிச்சொல், வினையெச்சம் (அ) வினையடை (அ) வினை உரிச்சொல், ஒலி வேறுபாடு, எதிர்ச்சொல், ஒரு பொருள் பல சொல், அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி, இணைப்புச்சொல்.
நிலை 6 - Grade 6
படம் பார்த்து வெவ்வேறு சூழலை அறிந்துக்கொண்டு, குறிப்புச் சொற்களின் உதவியுடன் பேச்சுத் தமிழில் பேசுதல், விளையாட்டுகள் மூலம் எளிமையாகப் புரிந்துக் கொண்டு பேசுதல், திட்டப்பணிகள் செய்வதன் மூலம் வித விதமான தலைப்புகளை ஆராய்ந்துப் பேசுதல், பாகமேற்று நடித்தல், பல்வேறு சூழல்களில் கருத்துகளை எளிய முறையிலும் பயன்பாட்டுக்க ஏற்ற வகையிலும் கூறுதல், தேவைக்கேற்பக் குரல் ஏற்ற இறக்கத்துடன் பேசுதல், சூழலுக்கேற்ப பேச்சுத் தமிழில் பேசுதல் அல்லது எழுத்துத்தமிழில் பேசுதல்.
எழுதுதல்:
சூழல், தொடர்படங்கள், உதவிச் சொற்கள், சிறு குறிப்புகள் முதலியவற்றைப் பயன்படுத்தித் தம் கருத்துகளை எழுதுதல். தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும் எழுதுதல். படித்த சொற்களையும், தொடர்களையும் நினைவுகூர்ந்து எழுதுதல்; படித்த
எழுத்துகளையும். சொற்களையும் கொண்டு எளிய வாக்கியங்களை உருவாக்குதல். படம், படத்தொடர், சூழல் முதலியவற்றையொட்டிக் கதை அல்லது கட்டுரை எழுதுதல். வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தல், ஆசிரியர் சொல்வதைப் புரிந்து, கேட்டுச் சரியான சொல்லை எழுதுதல். சொற்களை வரிசைப்படுத்தி வாக்கியம்
அமைத்தல்.
படித்தல்:
சொற்களை சரியான உச்சரிப்புடன் பொருள் அறிந்து சரளமாக வாசித்தல். வாக்கியங்களைப் பொருள் அறிந்து ஏற்ற இறக்கத்துடன் வாசித்தல். குறைந்த வாக்கியங்கள் கொண்ட பாடல்கள், கதைகள் வாசித்தல். திருக்குறள் பொருள் அறிந்து வாசித்தல். பத்தியை வாசித்துக் கருத்தறிதல்.
இலக்கணம்:
வேற்றுமை உருபு, ஆண்பால், பெண்பால், குறில், நெடில், பெயர்ச்சொல், பெயரெச்சம், பெயரடை, வினைச்சொல், வினையெச்சம், வினையடை, வினைமுற்று, ஆண்பால், பெண்பால், காலங்கள், ஒருமை, பன்மை, எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், மூவிடப்
பெயர்கள்.
நிலை 7 - Grade 7
பேசுதல்:
விவாதம் செய்தல், கருத்துரைத்தல், கதை கூறுதல், பாகமேற்று நடித்தல், பல்வேறு சூழல்களில் கருத்துக்களை எளிய முறையிலும் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலும் கூறுதல். தேவைக்கேற்பக் குரல் ஏற்ற இறக்கத்துடன் பேசுதல், சூழலுக்கேற்ப பேச்சுத் தமிழில் பேசுதல் அல்லது எழுத்துத்தமிழில் பேசுதல். கேட்ப்போரின் கேள்வியைப் புரிந்து
கொண்டு அதற்கு ஏற்ற பதிலை வாக்கியத்தில் கூறுதல். பொருத்தமான சொற்களையும் பலதரப்பட்ட வாக்கியங்களையும் பயன்படுத்தித் தெளிவாகக் கருத்துப் பரிமாற்றம் செய்தல். கருத்துப் பரிமாற்றத்தைத் தொடங்கவும், தொடர்ந்து நிகழ்த்தவும், சரியான முறையில் முடிக்கவும் அறிந்திருத்தல். இடம், பொருள், சூழலுக்கேற்பத் தெளிவாகக் கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்த அறிந்திருத்தல்.
எழுதுதல்:
சூழல், தொடர்படங்கள், உதவிச் சொற்கள், சிறு குறிப்புகள் முதலியவற்றைப் பயன்படுத்தித் தம் கருத்துகளின் மூலம் கதை அல்லது கட்டூரை எழுதுதல். தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும் எழுதுதல். படித்த சொற்களையும், தொடர்களையும் நினைவுகூர்ந்து எழுதுதல்; படித்த எழுத்துகளையும், சொற்களையும் கொண்டு வாக்கியங்களை உருவாக்குதல். மொழிபெயர்ப்பு, வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தல்.
படித்தல்:
சொற்களை சரியான உச்சரிப்புடன் பொருள் அறிந்து சரளமாக வாசித்தல். வாக்கியங்களைப் பொருள் அறிந்து ஏற்ற இறக்கத்துடன் வாசித்தல். குறைந்த வாக்கியங்கள் கொண்ட பாடல்கள், கதைகள் வாசித்தல். திருக்குறள் பொருள் அறிந்து வாசித்தல். பத்தியை வாசித்துக் கருத்தறிதல். பாடத்தை வாசித்துப் பொருள் உணர்ந்து
விவரித்தல். கதைப் புத்தகங்களை ஆழ்ந்து படித்தல்.
இலக்கணம்:
வேற்றுமை உருபு, ஆண்பால், பெண்பால், குறில், நெடில், பெயர்ச்சொல், பெயரெச்சம், பெயரடை, வினைச்சொல், வினையெச்சம், வினையடை, வினைமுற்று, ஆண்பால், பெண்பால், காலங்கள், ஒருமை, பன்மை.
நிலை 8 - Grade 8
பேசுதல்:
விவாதம் செய்தல், கருத்துரைத்தல், கதை கூறுதல், பாகமேற்று நடித்தல். பல்வேறு சூழல்களில் கருத்துகளை எளிய முறையிலும் பயன்பாட்டுக்க ஏற்ற வகையிலும் கூறுதல். தேவைக்கேற்பக் குரல் ஏற்ற இறக்கத்துடன் பேசுதல், சூழலுக்கேற்ப பேச்சுத் தமிழ் அல்லது எழுத்துத்தமிழில் பேசுதல். கேட்போரின் கேள்வியைப் புரிந்து கொண்டூ அதற்கு ஏற்ற பதிலை வாக்கியத்தில் கூறுதல். பொருத்தமான சொற்களையும் பலதரப்பட்ட வாக்கியங்களையும் பயன்படுத்தித் தெளிவாகக் கருத்துப் பரிமாற்றம் செய்தல். கருத்துப் பரிமாற்றத்தைத் தொடங்கவும், தொடர்ந்து நிகழ்த்தவும், சரியான முறையில் முடிக்கவும் அறிந்திருத்தல். இடம், பொருள், சூழலுக்கேற்பத் தெளிவாகக் கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்த அறிந்திருத்தல். கருத்துகளை மேலும் விளக்க அறிந்திருத்தல். திருக்குறள் பொருள் விளக்கிக் கூறுதல்.
எழுதுதல்:
சூழல், தொடர்படங்கள், உதவிச் சொற்கள், சிறு குறிப்புகள் முதலியவற்றைப் பயன்படுத்தித் தம் கருத்துகளை குறைந்தது பத்து வாக்கியங்களை நிரல்பட எழுதுதல். தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும் எழுதுதல். படித்த சொற்களையும், தொடர்களையும் நினைவுகூர்ந்து எழுதுதல்; படித்த சொற்களைக் கொண்டு எளிய
வாக்கியங்களை உருவாக்குதல். படம், படத்தொடர், கழல் முதலியவற்றையொட்டிக் கதை அல்லது கட்டுரை எழுதுதல்.மொழிபெயர்த்தல். உயர்நிலை சொல்வளம்.
படித்தல்:
சிறிய நூல்களை பொருள் உணர்ந்து சரளமாக வாசித்தல். பலவிதமான நூல்களை ஆழ்ந்து படித்தல். படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், போன்ற பலதரப்பட்ட நூல்களை படித்து அவற்றில் உள்ள நேரடிப் பொருளை புரிந்து கொண்டூ ஒருங்கிணைத்தல்.
இலக்கணம்:
வேற்றுமை உருபுகள் இணைத்து எழுதுதல், பெயரெச்சம், பெயரடை, பெயர் உரிச்சொல் பயன்பாடு, வினையெச்சம், வினையடை, வினை உரிச்சொல் பயன்பாடு, ஒலி வேறுபாடூ அறிதல்.